அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம்
திப்பணம்பேட்டை, 52 புதுக்குடி குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
1979ம் ஆண்டு திருப்பணி செய்வதாக மருளாளிகள், கிராமவாசிகள் சேர்ந்து கூட்டம் தீர்மானிக்கப்பட்டது. அதே ஆண்டில் கோயில் பூசாரி மகன், மகள் வாரிசு திரு.நடராஜன், திருமதி.வசந்தா சாமிநாதன் ஆகியோர் ஏற்படுத்திய வழக்கால் திருப்பணி நின்றுவிட்டது.
1989 ம் ஆண்டு மீண்டும் திருப்பணி வேலைகள் நடைபெற மருளாளிகள், கிராமவாசிகள் ஆலய வளாகத்தில் ஒன்று கூடி முகூர்த்தம் செய்யப்பட்டது. மீண்டும் 22/08/97 ம் ஆண்டு நூதனமாக கோயில்கள் கட்ட தீர்மானித்து, ஸ்ரீ கணபதி ஹோமம், அஷ்டதிக் கஜங்களுக்கு பூசணிக்காய் பலி, பாலாலியம் ஆகியவைகள், சேங்காலிபுரம் சிவாச்சாரியார் ஹரிஹரன் அவர்கள் முன்னின்று நடத்தி துவங்கி வைத்தார்கள்.
மீண்டும், 16/10/97 அன்று ஸ்தலம் பூஜை போட்டு தஞ்சாவூர் ஒப்பந்தக்காரர் திரு.ஆறுமுகம் துவக்கினார். மருளாளிகள் குடும்பம் ஒன்று சேர்ந்து செய்யப்பட்டது.
மீண்டும், 17/06/99 அன்று பாதியில் நின்ற கட்டுமான பணியை திருமருகல், ஆதனக்குடி ரவிச்சந்திரன் சிறப்பு பூஜை செய்து ஆரம்பித்தார். பணிகள் தொடர்ந்து நடந்தன.
22/01/2000 அன்று மயிலாடுதுறை சித்தர்காடு வைத்தியநாதன் சிற்பியால் நூதனமாக ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கஞ்சமலை ஈஸ்வரர், ஸ்ரீ பச்சை அம்மன், ஸ்ரீ காத்தாயி அம்மன், ஸ்ரீ ஆஞ்சிநேயர், ஸ்ரீ வீரன், நந்தி, பலி பீடங்கள், சிலா விக்கிரஹங்களாக செய்யப்பட்டு, குடவாசல் பிடாரிக்கோயில் தெருவில் ஒரு வீட்டில் பூஜை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.